உடலைப் பின்புறமாக வளைத்து கோவில் படிக்கட்டுகளில் ஏறி சாதனை படைத்த சிறுவன்

உடலைப் பின்புறமாக வளைத்து கோவில் படிக்கட்டுகளில் ஏறி சாதனை படைத்த சிறுவன்

1 mins read
dce0d4fa-f935-4b4a-be74-d39090004dd3
சாதனை படைக்க கோவில் படிக்கட்டுகளில் ஏறும் சிறுவன் ரிஷ்வந்த் குமார். - படம்: ஊடகம்

திண்டுக்கல்: உடலை பின்புறமாக வளைத்து படிக்கட்டுகளில் ஏறி சாதனைப் படைத்துள்ள 14 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரகாசம். இவரது 14 வயது மகன் தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிர யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரிஷ்வந்த் குமார், யோகாவில் பல்வேறு சாதனைகளைப் புரிய வேண்டும் என விரும்புகிறார்.

இந்நிலையில் சக்கராசனம் என்று குறிப்பிடப்படும் யோகாசன முறையைப் பயன்படுத்தி தனது உடலை பின்புறமாக வளைத்து பழனி கோவில் படிகளில் ஏறி சாதனைபடைத்துள்ளார் ரிஷ்வந்த்.

உடலை வில்லாக வளைத்து 100 படிக்கட்டுகளில் ஏறியதையடுத்து ரிஷ்வந்தின் பெயர் ’நோபல் வேர்ல்ட் ரிகார்ட்’ அமைப்பு உலக சாதனையாக பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து யோகக் கலையில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்த முயற்சி செய்ய உள்ளதாக சிறுவன் ரிஸ்வந்த் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தான்.

இந்தச் சாதனைச் சிறுவனுக்கு ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்