‘தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும்தானா தமிழ்நாட்டுக்கு’

‘தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும்தானா தமிழ்நாட்டுக்கு’

1 mins read
20d9bad8-16a1-4f8b-b514-92cc1595577d
 நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சு.வெங்கடேசன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ் நாட்டின் மதுரையைத் தவிர மற்ற வட இந்திய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டு விட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (20-02-24) ஜம்முவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.32,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கியும் வைத்தார்.

பின்னர் விஜய்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி, குஜராத் ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 25ஆம் தேதி வரை எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறந்துவைக்க உள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அடுத்த ஆறு நாள்களில் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட மதுரையைத் தவிர மற்ற அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டுக்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும்தானே?,” என்று புகைப்படங் களைப் பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்