தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரிஷா பற்றி அவதூறு: மன்னிப்பு கோரிய அதிமுக பிரமுகர்

1 mins read
716da659-4743-4ce8-91eb-8a94b0d3cae8
நடிகை திரிஷா. - படம்: ஊடகம்

சென்னை: நடிகை திரிஷா குறித்து தாம் தெரிவித்த கருத்துகளுக்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாக அதிமுக முன்னாள் நிர்வாகியான ஏ.வி.ராஜூ தெரிவித்துள்ளார்.

தாம் அவதூறாக பேசி விட்டதாக சிலர் தவறான தகவலை பரப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு திரைப்பட நடிகை குறித்தும் தாம் தவறாக ஏதும் பேசவில்லை என்றும் தமது கருத்துகளால் சம்பந்தப்பட்டவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என்றும் ராஜூ கூறியுள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் இவர், திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையே திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, சேரன், பேரரசு, நடிகர் மன்சூர்அலிகான், விஷால் உள்ளிட்ட பலரும் திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாக ஏ.வி.ராஜூவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் சட்டரீதியாக செயல்பட இருப்பதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.

கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவெறுப்பாக உள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்