தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூதாட்டியை நடுவழியில் இறக்கிய ஓட்டுநர் மீது வழக்கு

1 mins read
8b06cd07-468e-47aa-99d0-f50bb1f0e6b3
படம்: - தமிழக ஊடகம்

தருமபுரி: பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் வியாழக்கிழமை (பிப்ரவரி 22) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டியை மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி அவர்கள் பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளனர்.

இது தொடர்பான காணொளி வெளியான நிலையில், புதன்கிழமை பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்