சென்னை: 500 இடங்களில் இலவச இணைய வசதி

சென்னை: 500 இடங்களில் இலவச இணைய வசதி

1 mins read
26f1a55d-af68-485b-9179-050d023c9638
இலவச இணைய வசதி திட்டம் ஏராளமானோருக்கு உதவிகரமாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: சென்னையில் இலவச இணையவசதி தருவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப மாநாட்டையொட்டி 500 இடங்களில் இலவச இணையவசதி அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்துகிறது.

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் முக்கியமான ஆயிரம் இடங்களில் இலவச ‘வைஃபை’ சேவை வழங்கப்படும் என திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல் கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்