தொழிலதிபர் கடத்தல்: கார், பணம் பறித்த இருவர் கைது

1 mins read
7ffd1d7c-13a8-44b6-b585-ea0e61d74b0d
கடத்தப்பட்ட கார்த்திகேயன் பின்னர் விடுவிக்கப்பட்டார். - சித்திரிப்புப் படம்: ஊடகம்

சென்னை: தொழில் அதிபரைக் கடத்தி அவரது கார், நகைகளை கொள்ளயடித்துச் சென்ற இருவரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

தொழிலதிபரான கார்த்திகேயன், ஹிஜாவு என்ற நிதி நிறுவனத்தின் முகவராகவும் செயல்பட்டு வந்தார்.

அந்த நிறுவனத்திற்காக பலரிடம் முதலீடாக பணம் திரட்டினார். தேவகோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்ட நான்கு பேர் 80 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ஹிஜாவு நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. இதையடுத்து கார்த்திகேயனைத் தொடர்புகொண்ட பாலமுருகன் தன்னிடம் வசூல் செய்த தொகையைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். மேலும் கார்த்திகேயனை தேவகோட்டைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

டிசம்பர் 24ஆம் தேதி தேவகோட்டை வந்த கார்த்திகேயனை பாலமுருகனும் அவரது நண்பர்களும் அதிரடியாக கடத்திச் சென்றனர். அவரை தஞ்சாவூர், திருச்சி, சென்னை என பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று மிரட்டி அவரது கார், ரொக்கப்பணம், நகைகளைப் பறித்தனர்.

பின்னர் அவரை விடுவித்துள்ளனர். இதையடுத்து இந்தக் கடத்தல் குறித்து கார்த்திகேயன் காவல் துறையில் புகார் அளித்தார். விசாரணையின் போது கார்த்திகேயனின் கார் நிறத்தை மாற்றி பாலகுரு அதைப் பயன்படுத்துவது தெரிய வந்தது.

இதையடுத்து, காவல் துறை கடத்தலில் ஈடுபட்ட நால்வரையும் கைது செய்தது.

குறிப்புச் சொற்கள்
ஆள்கடத்தல்

தொடர்புடைய செய்திகள்