சமூக ஊடகங்களில் பிரசாரத்தைத் தீவிரமாக்க தமிழக காங்கிரஸ் திட்டம்

சமூக ஊடகங்களில் பிரசாரத்தைத் தீவிரமாக்க தமிழக காங்கிரஸ் திட்டம்

1 mins read
ab2a5dac-4760-459c-acaf-1c461957521b
செல்வப்பெருந்தகை. - படம்: ஊடகம்

சென்னை: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினரின் கருத்துகள் மற்றும் செயல்பாடுகளுக்குப் பதிலடி கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் சமூக ஊடக நிர்வாகிகளுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் மேலிடப் பார்வையாளர் அஜோய் குமாரும் விரிவான ஆலோசனை நடத்தினர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரத்தைத் தீவிரப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

அதில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள், அதைச் செயல்படுத்தாதது, விலை உயர்வு, விவசாயிகளின் உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக பாஜக ஆட்சியில் உள்ளதை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

விவசாயிகளின் ஆதரவு மட் டும் தேவை. ஆனால் அவர் களின் உரிமையை மோடி மறுக்கிறார். அதனால் போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இதிலிருந்து மோடி தப்ப முடியாது. தமிழகத்தில் பாஜக மூன்று விழுக்காடு வாக்குகள்கூட பெற வாய்ப்பில்லை.

மேலும் காங்கிரஸ் கட்சியில் சிறப்பாக செயல்படாத தலைவர்கள் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பதவி ஏற்றுள்ள நிலையில், அக்கட்சி யில் காலம் காலமாக இருந்து வரும் கோஷ்டி பூசலுக்கு எப்படி யாவது முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்