கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்கிறது தேமுதிக

கூட்டணி குறித்து யாரும் பேசவில்லை என்கிறது தேமுதிக

1 mins read
d4a02a22-b4da-49d3-a39a-4af64199421e
பிரேமலதா. - படம்: ஊடகம்

சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் எந்தக் கட்சியும் பேசவில்லை என்றும் கூட்டணிக்கு வருமாறு அழைக்கவும் இல்லை என்றும் அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தேமுதிகவுக்குப் பத்து தொகுதிகளை ஒதுக்கும் கூட்டணியில் மட்டுமே இணைவோம் என்று பிரேமலதா அண்மையில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

எனினும் அத்தனை தொகுதிகளை ஒதுக்க விரும்பாத திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேமுதிகவை தங்கள் வசம் இழுக்க ஆர்வம் காட்டவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்