தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்எல்ஏ பதவியில் இருந்து விலகினார் விஜயதாரணி

1 mins read
b8bd2ba9-918b-4ace-9dee-453491fd0546
விஜயதாரணி. - படம்: ஊடகம்

சென்னை: பாஜகவில் இணைந்துள்ள விஜயதாரணி தனது எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தமிழறிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி ஆவார்.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி விஜயதாரணியின் எம்எல்ஏ பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சபாநாயகருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் விஜயதாரணி.

குறிப்புச் சொற்கள்