திமுக கூட்டணியில் இரு கட்சிகளுக்கு தலா ஓரிடம்

திமுக கூட்டணியில் இரு கட்சிகளுக்கு தலா ஓரிடம்

1 mins read
11a558f1-3125-4416-83aa-bfdfd0ae6a5d
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம். - படம்: ஊடகம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகிறது திமுக தலைமை.

இம்முறை திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நவாஸ் கனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு உதயசூரியன் சின்னத்திலேயே அக்கட்சி போட்டியிட உள்ளது.

குறிப்புச் சொற்கள்