தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மோடி இட்லி’ உணவகம்: ரூ.10க்கு மூன்று இட்லி

1 mins read
00241027-9214-4d3d-a449-6df72114a5e8
‘மோடி இட்லி’ உணவகம். - படம்: ஊடகம்

சென்னை: ஏழைகளுக்கு உதவும் வகையில் மூன்று இட்லிகளை 10 ரூபாய்க்கு விற்று வருகிறார் பாஜகவைச் சேர்ந்த கோபிநாதன்.

சாலையோரத்தில் தள்ளுவண்டி ஒன்றை வைத்து, ‘மோடி இட்லி உணவகம்’ எனக் குறிப்பிட்டு அவர் அந்த நடமாடும் உணவகத்தை நடத்தி வருகிறார்.

“வார இறுதி நாள்களைத் தவிர்த்து மற்ற ஐந்து நாள்களும் இந்த உணவகம் செயல்படும். இதன் மூலம் பத்துப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

“நாள்தோறும் சுமார் 300 இட்லிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் லாபம் எதுவும் கிடைக்காது. எனினும் மனநிறைவு உண்டாகும்,” என்கிறார் உணவகத்தை நடத்தும் கோபிநாதன்.

குறிப்புச் சொற்கள்