முதியவர் அளித்த சால்வையைத் தூக்கி வீசிய சிவகுமார்

முதியவர் அளித்த சால்வையைத் தூக்கி வீசிய சிவகுமார்

1 mins read
9f37dc72-3736-4d32-aa3c-088a3c2d68f3
நடிகர் சிவகுமார். - படம்: ஊடகம்

காரைக்குடி: நடிகர் சிவகுமார் காரைக்குடியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது, முதியவர் ஒருவர் அவருக்காக கொண்டு வந்த சால்வையை மேடையேறி கொடுத்தார். அதனை வாங்கிய சிவகுமார் தூக்கி எறிய, இந்தக் காட்சியைக் கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. சிவகுமாருக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிவகுமார் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்