கூடுதல் தொகுதி கேட்டு திமுகவுக்கு திருமாவளவன் நெருக்குதல்

கூடுதல் தொகுதி கேட்டு திமுகவுக்கு திருமாவளவன் நெருக்குதல்

1 mins read
3bbe10c4-9e25-4f1f-a748-7659403dd2f3
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கடந்த தேர்தலைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்பதால் திமுகவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும் தமது கட்சிக்குக் கடந்த முறையைவிட கூடுதலான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் உறுதியாக உள்ளார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக, ஏற்கெனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுகவிடம் இருந்து புதன்கிழமை (பிப்ரவரி 28) அழைப்பு வரும் என்று முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அந்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையின் போது எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது திமுக தரப்பில் வலியுறுத்தப்படும்.

கடந்த முறை திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளைத் தவிர மேலும் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த உள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “என் சொந்தத் தொகுதியான சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன்; இதில் எந்தவித சந்தேகமும் இல்லை,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “பாஜகவை விட்டு அதிமுக விலகிச் சென்றாலும் அதிமுகவை பாஜக விடுவதாக இல்லை. அதிமுகவை பலவீனப்படுத்தி 3வது இடத்திற்குத் தள்ளும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது” என்றார்.

குறிப்புச் சொற்கள்