ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி

ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி

1 mins read
65dd0502-46ad-46f5-874f-9b3607b0f9d9
ரயிலை நிறுத்தி விபத்து ஏற்படாமல் தடுத்த சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதி. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியரை கிராமம் ‘எஸ்’ - வளைவு என்ற தமிழக-கேரள எல்லைப் பகுதியில், 25-2-2024 அன்று நள்ளிரவு திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து தண்டவாளத்தில் விழுந்தது.

“அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா- வடக்குத்தியாள் தம்பதியினர், செங்கோட்டையிலிருந்து வந்து கொண்டிருந்த ரயிலின் சத்தத்தைக் கேட்டு, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடி, கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகைக் காண்பித்து, ரயிலை நிறுத்தி, பெரும் விபத்தை தடுத்துள்ளனர்.

“தங்களது முதிர்ந்த வயதையும் இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீரச் செயலை பாராட்டி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவர்களுக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளேன்,” என்று கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்