பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி

1 mins read
24d31e47-83dd-4338-9417-b42621f66d35
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடக, தகவல் தொடர்பு பிரிவுத் தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

பல்வேறு கட்சிகள் பிரசாரங்களிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சியும் தற்போது தனது கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ். அழகிரி மாற்றப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.

சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவராக எஸ். ராஜேஷ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது மேலும் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக ஊடக மற்றும் தகவல்தொடர்பு பிரிவுத் துறையின் மாநிலத் தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் வெளியிட்டுள்ளார்.

பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன், இந்தியாவின் பொருளாதாரம், தனிநபர் நிதி மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த நேர்காணல்கள் மூலம் பிரபலமடைந்தவர்.

குறிப்புச் சொற்கள்