அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி: அமைச்சர்

அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி: அமைச்சர்

1 mins read
d5ed870a-c52c-4af8-9235-7bc1c5bbb36b
தமிழக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: அரசு மருத்துவர் ஒருவர் பணியிலிருக்கும்போது இறந்துபோனால் அவருடைய வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர் சேமநல நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், ஏழு பேருக்கு ரூ.7 கோடியை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும்.

“கருணை அடிப்படையில் மற்ற துறைகளில் அரசுப் பணி வழங்கப்படுவதுபோல, மருத்துவதுறையில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அரசுப் பணி நியமனம் செய்யப்படும்.

“மருத்துவர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அரசுப் பணி நியமனம் செய்யப்படும். வாரிசுகள் விண்ணப்பித்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என்ற மூன்று பணிகளில் ஒரு பணியை வழங்க ஏற்பாடு செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்