தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழடி அகழாய்வுப் பொருள்களை தமிழகத்திடம் ஒப்படைக்க உத்தரவு

1 mins read
4b87259d-a14c-4cb7-a470-8bb7bd19359c
இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வுப் பொருள்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு. - படம்: தமிழக ஊடகம்

மதுரை: கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிப்ரவரி 29ஆம் தேதி தீர்ப்பளித்தது.

அதன்படி, இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வுப் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

மத்திய அரசு ஒப்படைக்கும் அகழாய்வுப் பொருள்களை, பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். இதில் எந்த முடிவும் எடுக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்