சென்னை: மண்மொழி இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான ராஜேந்திர சோழன் உடலநலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 79.
அஸ்வகோஷ் என்றும் அறியப்பட்ட அவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவராவார்.
இருபது ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், வட தமிழகத்தில் உள்ள அடித்தள மக்களின் வாழ்க்கையை விரிவாகப் பதிவு செய்துள்ள எழுத்தாளர்களில் ஒருவராவார். ‘21வது அம்சம்’, ‘புற்றில் உறையும் பாம்புகள்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவரது மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

