தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதை: பாடகரின் விமானப் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள்

1 mins read
ce278341-8294-4bf3-a09c-ab235ec67228
வேல் முருகன். - படம்: ஊடகம்

சென்னை: மதுபோதையில் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல சினிமா பிண்ணனி பாடகர் வேல்முருகன் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக வெளியான காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

சனிக்கிழமை மாலை இண்டிகோ விமானம் மூலம் திருச்சி செல்ல இருந்த பாடகர் வேல்முருகன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அவர் மதுபோதையில் இருப்பதை அறிந்த அதிகாரிகள் விமான நிலையத்திற்குள் அவரை அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வேல்முருகன்.

இதையடுத்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், அவர் அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரியதாகவும் அதன் பிறகு வேறு விமானத்தில் திருச்சி சென்றதாகவும் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்