நெய்வேலி: பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) நி 7 விழுக்காட்டுப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் மூலம் 2,000 கோடி ரூபாய் முதல் 2,100 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கூடுதலாக 2 விழுக்காட்டுப் பங்குகளை விற்பனை செய்யவும் அரசு விரும்புவதாகவும் இந்தியத் தனியார் தொலைக்காட்சியைச் சுட்டி, எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
முதலீடு, பொதுச் சொத்து மேலாண்மைத் துறை மற்றும் அரசு அதிகாரிகள் இது குறித்து விரைவில் முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனப் பங்குதாரர் முறையின்படி, 2023 டிசம்பர் நிலவரப்படி நிறுவனத்தில் 79.2 விழுக்காட்டுப் பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது.
என்எல்சி நிறுவனம் ஓராண்டிற்குமுன் ரூ.406.7 கோடி இழப்பை எதிர்கொண்ட நிலையில், 2023-24 நிதியாண்டின் 3வது காலாண்டில் ரூ.250.4 கோடி ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபத்தை அது ஈட்டியது.

