பல கோடி ரூபாய் வரி நிலுவை வைத்துள்ள மத்திய அரசு நிறுவனம்

1 mins read
e4274dfc-00eb-4f66-a85c-23e896de31ae
துறைமுக ஆணைய அலுவலகத்தின்முன் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பல கோடி ரூபாய் சொத்து வரி நிலுவை வைத்துள்ள மத்திய அரசு நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி அறிவிப்புக் கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சென்னை துறைமுக ஆணைய அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்புக் கடிதம் ஒன்றை ஒட்டிவிட்டுச் சென்றனர். மொத்தமாக ரூ. 10.3 கோடி சொத்து வரியைத் செலுத்தாமல் அந்நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

சொத்து வரி நிலுவைத்தொகை குறித்து ஏற்கெனவே பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன்வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நிலுவைத்தொகை 10.3 கோடி ரூபாயுடன், நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12.5 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்