பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறது இந்தியன் ஸ்டேட் வங்கி

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் ஊழலுக்கு இந்திய ஸ்டேட் வங்கி துணைபோவதாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின் ஜூன் 30 ஆம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை பொது வெளியில் வெளியிட பாரத ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

“தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அரசமைப்புச் சட்டத்திற்கும், அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்று கூறி கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முடக்குகிற வகையில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட முயல்கிறது.

“1990-களிலேயே கணினி மயத்தை தொடங்கி முழுமையாக நிறைவேற்றப்பட்டிருப்பது பாரத ஸ்டேட் வங்கியில் தான். இந்தச் சூழலில் 22,217 தேர்தல் பத்திர நன்கொடை குறித்த விவரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கி ஐந்து மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் செல்வப் பெருந்தகை. 29 கிளைகளில் இருந்தும் தகவல்களைப் பெறுவது தற்போதைய மின்னியல் உலகத்தில் கடினமான பணியல்ல.

“பா.ஜகவுக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதை மூடி மறைக்க பாஜகவின் தூண்டுதலின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி 5 மாதங்கள் கால அவகாசம் கேட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது.

இன்றைய பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் மோடியின் நண்பர் அதானியின் தயவில் தான் பதவி நீட்டிப்பிலிருந்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டு ஏற் கெனவே கூறப்பட்ட நிலையில், ஆளும் பாஜகவின் நிர்ப்பந்தத்தில் அவர் செயல்பட வேண்டியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தேர்தல் பத்திரம் சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பிப்ரவரி 15ஆம் தேதி அளித்தது.

மார்ச் 6 ஆம் தேதிக்குள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் நன்கொடை அளித்தவர்கள் விவரத்தை வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் நன்கொடை அளித்தவர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் இன்றைக்கு அந்த உத்தரவை முடக்குகின்ற வகையில் கால அவகாசம் கேட்பது பாஜகவின் ஊழலை தேர்தலுக்கு முன்பாக பாதுகாக்கிற முயற்சியாகவே கருத வேண்டியிருக்கிறது.

இதன்மூலம் பாஜகவுக்கு யார், யார் நன்கொடை கொடுத்தார்கள்? நன்கொடை கொடுத்தவர்கள் பெற்ற கைம்மாறு என்ன? என்ற விவரங்கள் அம்பலமாகும் என்கிற அச்சத்தின் காரணமாகவே விவரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கி தடுக்கப்படுகிறது என்று செல்வப்பெருந்தகை தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியை தன் கைப்பாவையாகப் பயன்படுத்தி இதுவரை செய்த முறைகேடுகள் மற்றும் சதிகளைக் கண்டித்து அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் மாநிலம் முழுவதும் இந்திய ஸ்டேட் வங்கிகளின் கிளைகளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபடக்கோரி செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!