சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற அமர்வுகளின் (தேசிய லோக் அதாலத்) மூலம் ஒரே நாளில் 62,559 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதற்கான அமர்வுகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும், ஓய்வு பெற்ற நீதிபதிகளும் இடம்பெற்று இருந்தனர். மொத்தம் 482 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
62,559 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.505 கோடி இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு செய்திருந்தது.
வாகன விபத்துகள், கடன் வசூல் உள்ளிட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.