குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல: விஜய் திட்டவட்டம்

சென்னை: புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்கிய பின்னர் அவர் முதன்முறையாக அரசியல் ரீதியில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதிலும், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு எதிராக அவர் குரல் கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக திங்கட்கிழமை இரவு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விஜய்யும் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல,” என்று விஜய் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் சூழல் நிலவுவதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்கள் கடும் எதிர்ப்பு

இதற்கிடையே, குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மக்களை மனம், மொழி, இனத்தால் பிளவுபடுத்தும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க இயலாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!