தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாஃபர் சாதிக் சொத்துகளை முடக்கும் அமலாக்கத்துறை

2 mins read
4dee4858-58ba-429d-a200-449ed8826462
ஜாஃபர் சாதிக். - படம்: ஊடகம்

சென்னை: போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜாஃபர் சாதிக்கின் கோடிக்கணக்கான சொத்துகளை முடக்க மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அனைவருக்கும் விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்படும் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாஃபர் சாதிக்கிடம் டெல்லி போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த ஏழு நாள்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு உணவுப் பொருள்கள் அனுப்புவதாகக் கூறி போதைப்பொருள்களை அனுப்பியுள்ளார் ஜாஃபர் சாதிக் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார் என்றும் பலகோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஜாஃபர் சாதிக்கிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், அவரது சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சொத்துகளின் பின்னணி குறித்தும் முழுமையான விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் கூறியதாக ஊடகச் செய்தி கூறுகிறது.

ஜாஃபர் சாதிக் தங்கு விடுதி, கட்டுமான நிறுவனங்களில் அதிக முதலீடுகளைச் செய்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய சட்ட விரோதப் பணப்பரிமாற்றங்கள் குறித்தும் நிறைய தகவல்கள் கசிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜாஃபர் சாதிக் பல்வேறு அரசியல், திரையுலக பிரமுகர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் விரைவில் அதிகாரிகள் விசாரணை நடத்த இருப்பதாகத் தெரிகிறது.

போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாக திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்