செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்குக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்குக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

1 mins read
beaa3d9c-768d-4a94-b61a-d0c0eeb9981e
செந்தில் பாலாஜி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: கடந்த பல மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

முறைகேடான பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்தது.

எனினும் அமலாக்கத்துறை வழக்கு தொடக்க நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்