தமிழகத்தில் ஒருதுளி போதைப்பொருள்கூட இருக்கக்கூடாது: பழனிசாமி வலியுறுத்து

தமிழகத்தில் ஒருதுளி போதைப்பொருள்கூட இருக்கக்கூடாது: பழனிசாமி வலியுறுத்து

1 mins read
85742786-49ae-4d57-94b0-4d459d0f7c05
எடப்பாடி பழனிசாமி. - படம்: ஊடகம்

சென்னை: ஒருதுளி போதைப்பொருள்கூட தமிழகத்தில் விற்பனை ஆகாமல் தடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் தமிழக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி, தமிழகத்தை போதைப்பொருள்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம் என்றார்.

போதைப்பொருள்கள் மூலமாக வந்த பணத்தைக் கொண்டுதான் திமுக எதிர்வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்க இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருப்பதாக பழனிசாமி சாடினார்.

“தமிழகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு திமுகதான் காரணம். எனவே, இதற்குத் தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஆகியோர் பதவியில் இருந்து விலக வேண்டும். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்றார் பழனிசாமி.

குறிப்புச் சொற்கள்