சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. ஏற்கெனவே இக்கூட்டணியில் கொமதேக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
எனவே, மிக விரைவில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

