தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல்லடம் அருகே தோட்டத்து வீட்டில் நகைக் கொள்ளை

1 mins read
2ae18ec2-8eb4-4371-9ea8-4229246010ac
படம்: - தமிழக ஊடகம்

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் வேலப்பகவுண்டம்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தங்களுக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

புஷ்பலதா மற்றும் அவரது மருமகள் ஆகியோர் தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், தங்கச் சங்கிலி உட்பட 10 பவுன் நகைகளையும், 5,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்குத் திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புத்தரச்சல் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் 10 பவுன் நகைகளை வீட்டுக்குள் புகுந்து மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்