கன்னியாகுமரியில் மோடிக்குக் கறுப்புக் கொடி: காங்கிரஸ் அறிவிப்பு

கன்னியாகுமரியில் மோடிக்குக் கறுப்புக் கொடி: காங்கிரஸ் அறிவிப்பு

1 mins read
01deca34-9510-4a65-a80e-99fc443061b4
செல்வப்பெருந்தகை, மோடி. - படங்கள்: தமிழக ஊடகம்

சென்னை: கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

வியாழக்கிழமை அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறுகையில், “10 ஆண்டுகால மக்கள் விரோத பாஜக ஆட்சியினால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

“மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.

“தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசுகூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியைக் கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்