சரத்குமார் அரசியல் குறித்து மன்சூர் அலிகான் விமர்சனம்

சென்னை: நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் நிறுவனருமான மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”நான் என் சொந்த உழைப்பின் மூலமாகத் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். என்னிடம் கடன் வாங்கியவர்கள் தயவுசெய்து எங்கிருந்தாலும் என்னிடம் கொடுத்துவிடுங்கள்.

“அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் என்னோடு கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதிமுக என்ற பெரிய இயக்கத்தின் மூலமாக எனக்கொரு மக்களவை உறுப்பினர் பதவி கிடைத்துவிடும் என்று சில ஊடகங்களுக்கு பொறாமை உள்ளது.

“வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை இன்றே தொடங்க இருக்கிறேன்.

“பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது பிச்சை இடுவதற்கு சமம் என்று நடிகை குஷ்பு கூறியிருப்பது தவறானது. கண்டிக்கத்தக்கது.

“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே. முடிந்தால் குஷ்பு பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியதுதானே, அதை விட்டுவிட்டு இப்படிப் பேசுவது தவறானது.

மீண்டும் மோடி ஆட்சியமைக்க, தமிழகத்தில் காலூன்ற நான் விடமாட்டேன்; அதற்கான ஆயுதத்தை கையில் எடுப்பேன்.

“கிளியை வளர்த்து வேறு கையில் கொடுத்து விட்டீர்களே நாட்டாமை (சரத்குமார்),” என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!