நெல்லை: வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.45.51 லட்சம் வசூலித்து மோசடி செய்த இருவர் நெல்லை மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆடவர் தனது மகனுக்கு வேலை வாங்கித் தரும்படி மோசடி நபர்களை அணுகியுள்ளார். இதற்காக அவர் 45 லட்சம் ரூபாயை கொடுத்தும் வேலை கிடைக்கவில்லை.
ஒரு கட்டத்தில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாக நெல்லை மாவட்ட இணைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது பாதிக்கப்பட்டவர் பணத்தை இழந்தது உண்மை என்பது உறுதியானது.
மேலும், இந்த மோசடியில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அலுக்கோ ஒலுவா என்பவருக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது. இதையடுத்து அவரும் உத்தரகன்னடா பகுதியைச் சேர்ந்த ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

