திரைத்துளிகள்

திரைத்துளிகள்

2 mins read
8e816d25-aada-4ef4-865a-5678759f7575
விஜய் ஆண்டனி. - படம்: ஊடகம்
multi-img1 of 3

[ο]விஜய் ஆண்டனியை இயக்கும் ‘அருவி’ அருண்

‘அருவி’ படத்தை இயக்கிய அருண் பிரபு அடுத்து விஜய் ஆண்டனியை வைத்து படம் இயக்குகிறார். இது தனது முந்தைய படங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்ட படைப்பாக இருக்கும் என்கிறார் அருண்.

விஜய் ஆண்டனியின் அறிவுறுத்தல்படி புதுப்படத்திற்கான கதையில் பல்வேறு வணிக ரீதியிலான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தரப்பு கூறுகிறது.

முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

[ο]ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிய கமல்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் சங்கத்திற்கு என புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்கு சங்க நிர்வாகிகள் நிதி திரட்டு வருகின்றனர். எனினும் போதுமான தொகை இல்லாததால் கட்டுமானப் பணிகள் இன்னும் முடியவில்லை.

இந்நிலையில் புதிய கட்டடத்திற்காக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்த கமல் சங்க நிர்வாகிகள் கார்த்தி, விஷாலிடம் அதற்கான காசோலையை ஒப்படைத்துள்ளார்.

[ο]விஜய்யின் கடைசிப் படத்தை இயக்கும் ஹெச்.வினோத்

நடிகர் விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள விஜய் தற்போது நடித்துவரும் ‘கோஸ்ட்’ படத்துடன் திரையுலகில் இருந்து விலகப்போவதாக அண்மையில் அறிவுப்பு வெளியானது.

இந்நிலையில் அவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்றும் அந்தப் படத்திற்கான இயக்குநர் யார் என்பதை விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கமல்ஹாசன் நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று கூறப்பட்டது. எனினும் சில காரணங்களுக்காக அந்தப் படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து தனுஷ் அல்லது யோகிபாபுவை வைத்து வினோத் படம் இயக்குவார் என்று ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஜய்யை நேரில் சந்தித்தாராம் வினோத். அப்போது அவர் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் அந்தப் படத்தில் நடிக்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி