தேர்தல்: 14 மருத்துவர்களைக் களமிறக்கும் நாம் தமிழர் கட்சி

தேர்தல்: 14 மருத்துவர்களைக் களமிறக்கும் நாம் தமிழர் கட்சி

1 mins read
e1d21531-7d44-4828-ab60-a0ebce5b1cd2
நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும். - படம்: ஊடகம்

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 14 மருத்துவர்கள் போட்டியிட உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இம்முறை நாம் தமிழர் கட்சி கேட்ட சின்னத்தை ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் கைவிரித்துவிட்டது.

எனினும் அக்கட்சியினர் தீவிர தேர்தல் கள பிரசாரத்தைத் தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களிடம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேர்காணல் நடத்தி உள்ளார்.

அவர் தேர்வு செய்துள்ள 39 வேட்பாளர்களில் 14 பேர் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் எனக் கூறப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் 23 அல்லது 24ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை சீமான் அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்பட்டியலில் 4 பேராசிரியர்கள், 5 பொறியாளர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இம்முறை நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடுக்கப்படும் என சீமான் அறிவித்துள்ளார்.

எனினும், கட்சி களமிறக்கும் வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு கிடைக்கும் என நாம் தமிழர் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்