சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளிகளைக் கைது செய்ய காவல்துறையினரும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சதானந்தம் என்பவர் கைதானார். இதையடுத்து ஜாஃபர் சாதிக்கின் மற்ற நண்பர்களுக்கும் வலைவீசப்பட்டுள்ளது.
மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவினர் கடந்த இரு நாள்களாக ஜாஃபர் சாதிக்குடன் மின்னஞ்சல், கைப்பேசி மூலம் யாரையெல்லாம் தொடர்பு கொண்டுள்ளனர் என்பது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.