சென்னை: ‘புதுமைப்பெண்’ திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 49,664 பேர் பயன்பெறுவர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
‘புதுமைப் பெண்’ என்ற திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் வரும் கல்வி ஆண்டில் 49,664 பேர் பயனடைவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்துக்கு ரூ.370 கோடி ஒதுக்கப்படும் என்றும் இதை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார் என்றும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘புதுமைப் பெண்’ திட்டத்தை 2024-2025ஆம் கல்வி ஆண்டு முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் நீட்டித்து, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

