தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னூட்டிகளில் தங்கம் கடத்திய ஆடவர் கைது

1 mins read
f75072f7-1ee9-4832-837d-60a6103a4977
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம். - படம்: ஊடகம்

மதுரை: மின்னூட்டிகளில் (சார்ஜர்) மறைத்து வைத்து கடத்தப்பட்ட தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.6.60 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துபாயில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மதுரை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அனைத்துப் பயணிகளின் உடைமைகளும் சோதனையிடப்பட்ட நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த ஆனந்த் (40 வயது) என்ற ஆடவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

கைப்பேசி மின்னூட்டிகளில் தங்கத்தை மறைத்து வைத்து அவர் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

தேவிப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்