குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து விசிக ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து விசிக ஆர்ப்பாட்டம்

1 mins read
8b93b7b4-164e-498d-98cd-33620e832f74
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன். - படம்: ஊடகம்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்ற முடிவுக்கு பாஜக வந்துவிட்டதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கட்சித் தலைவர் திருமாவளவன், மதம், இனத்தின் பெயரால் படுகொலைகள் நிகழும்போது, சொந்த நாட்டில் வாழ முடியாமல் அண்டை நாட்டுக்கு புலம்பெயர்வது தவிர்க்க முடியாதது என்றார்.

“ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சாராத அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

“ஒருவேளை அந்தச் சமயத்தைச் சார்ந்தவர்கள் குடியுரிமை கேட்டு வந்துவிட்டால் அவர்களது வீடு உள்ளிட்ட அனைத்தையும் விட்டுவிட்டு முகாம்களுக்குச் செல்ல வேண்டும். இதை ஏற்க இயலாது,” என்றார் திருமாவளவன்.

குறிப்புச் சொற்கள்