ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் கைது

ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் கைது

1 mins read
4265d8ee-3916-43f2-8009-915d8be1d45f
பாஜக மாவட்ட தலைவர் அகோரம் (இடது), தருமபுரம் ஆதீனம். - படம்: ஊடகம்

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட புகாரை அடுத்து, தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியுடன் தொடர்புடைய ஆபாசக் காணொளி, ஒளிப்பதிவு இருப்பதாக சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மடாதிபதியின் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நான்கு பேர் கைதாகினர்.

இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் கைதாகினார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பதுங்கி இருந்த அவரை, காவல்துறையின் தனிப்படையினர் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்