காஞ்சிபுரம்: பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 600 வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் 300 பேர் ஊர்வலமாகச் சென்று தங்கள் வயலில் இறங்கி அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களைக் கட்டி அணைத்து கதறி அழுது, ஒப்பாரி வைக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஏராளமான காவல்துறை யினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.