ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 71 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 22 மீனவர்களும் வியாழக்கிழமை 15, சனிக்கிழமை 21 மீனவர்களும் கைதாகி உள்ளனர்.

