தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாஃபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை

1 mins read
7629b78d-4924-41d5-a9b2-194f55153fe4
முகமூடி அணிவித்து அழைத்து வரப்பட்ட ஜாஃபர். - படம்: ஊடகம்

சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ள ஜாஃபர் சாதிக் விசாரணைக்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது சென்னை, திருச்சியில் இருந்துதான் பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள்களை கடத்தினார் என்பது தெரியவந்தது.

ஆரம்பக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், ஜாஃபர் சாதிக் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவரிடம் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை மூன்று நாள்களாவது நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவரது வாக்குமூலம் விடையளிக்கும் என காவல்துறை நம்புகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்