தேனி தொகுதியில் போட்டியிட தினகரன் முயற்சி

1 mins read
24c204e0-dc11-4ebf-ba91-0245d4612753
டிடிவி தினகரன். - படம்: ஊடகம்

தேனி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகுதியின் நடப்பு உறுப்பினராக உள்ளார் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். அவர் மீண்டும் அதே தொகுதியில் களமிறங்க விரும்புவதாகவும் இதற்காக பாஜக தலைமையுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவரைவிட பாஜக மேலிடத்துடன் தினகரன் தரப்புக்கு அதிக செல்வாக்கு உள்ளதாகவும் தேனியில் தினகரன் போட்டியிடுவது உறுதி என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்