தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விசிக வேட்பாளர்களை அறிவித்தார் திருமாவளவன்

1 mins read
1a503831-dad2-428c-862b-d7627580626f
திருமாவளவன். - படம்: ஊடகம்

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளில் விசிக களம் இறங்குகிறது. இந்நிலையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியிலும் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்த அறிவிப்பை சென்னையில் செவ்வாய்க்கிழமை அன்று திருமாவளவன் அறிவித்தார். அவர் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே 5 முறை போட்டியிட்டுள்ளார். ஒரு முறை மட்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதே தொகுதியில் மீண்டும் களம் இறங்குகிறார்.

விழுப்புரம் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் சசிகுமார்.

குறிப்புச் சொற்கள்