சென்னை: திமுக கூட்டணி வேட்பாளராக நாமக்கல் தொகுதியில் கொங்கு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த சூரியமூர்த்தி களம் இறங்குகிறார்.
இவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளாக கொமதேகவின் தலைமை நிலையச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அவர், இருமுறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்.

