சென்னை: சென்னையில் உள்ள நான்கு காவல் நிலையங்கள் உலகத் தரத்தில் இருப்பதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்க வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்பது, காவல்நிலைய கட்டுமான அமைப்புகளை புதுப்பித்தல், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்துதல், பெண்கள், குழந்தைகளுக்கென தனியாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளின் அடிப்படையில் இந்த தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
சென்னையில் உள்ள நான்கு காவல் நிலையங்களில் இந்த வசதிகள் உள்ளதால் தென் சென்னைக்கு உட்பட்ட அடையாறு காவல் மாவட்டத்தில் கிண்டி, வேளச்சேரி, நீலாங்கரை, தரமணி ஆகிய 4 காவல் நிலையங்கள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.

