ரூ.10 நாணயங்களை சுமந்து வந்து வேட்பு மனு தாக்கல்

1 mins read
ce563e3c-ac2d-4c04-8547-5f4f98b6e4a6
காந்தியவாதி ரமேஷ். - படம்: தமிழக ஊடகம்

நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ். இவர் காந்தி போல் வேடம் அணிந்து தொடர்ந்து சமூக நலப் பணிகள் செய்து வருகிறார்.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடக்க நாளான புதன்கிழமை (மார்ச் 20) காந்தி வேடத்தில் ரமேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அப்போது வைப்புத் தொகையான ரூ. 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி தோளில் சுமந்தபடி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் ச. உமாவிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 

2,500 பத்து ரூபாய் நாணயங்களை எண்ணி முடிக்க சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் ஆனது. அதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்