200 ரூபாய்க்காக ஓட்டுநர் கொலை

200 ரூபாய்க்காக ஓட்டுநர் கொலை

1 mins read
b5688154-ce5c-4115-a8da-aa5fafcc4ae4
மாதிரிப்படம்: - பிக்சாபே

நாகர்கோவில்: விருதுநகர் மாவட்டம் விஸ்வநத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). ஓட்டுநராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மாரிமுத்துவும் அவருடன் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மங்களா தெருவைச் சேர்ந்த சாலமன் துரைராஜ் (33) என்பவரும் சேர்ந்து மது குடித்தனர்.

அப்போது ரூ.200 கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சாலமன் துரைராஜ், மாரிமுத்துவை பிடித்து கீழே தள்ளினார். இதில் அருகில் இருந்த கட்டிலில் அவரது தலை மோதி காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து சாலமன் துரைராஜ் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்