தங்கவிலைஅதிகரிப்பு

1 mins read
c221fb83-baff-49d6-9b08-a2e461362d1a
தங்கவிலை அதிகரித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால், நகை பிரியர்கள் மயக்கமடையாத குறையாக உள்ளனர்.

கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழன் (மார்ச் 21) சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ. 49,880 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ரூ6,235 விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் தங்கம் விரைவில் ரூ.50 ஆயிரத்தை தாண்டும் என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

வரலாறு காணாத வகையில் தங்க விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

வெள்ளி விலை என்ன? சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.81.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500க்கு விற்பனையாகிறது.

குறிப்புச் சொற்கள்