சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக ‘‘வெத்தலை பாக்கு மாத்தியாச்சு, தேதிதான் குறிக்கணும்’‘ என பதிலளித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அக்கட்சி லோக்சபா தேர்தலை முதன்முறையாக சந்திக்க இருக்கிறது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா. பிறகு, ராஜ்யசபா ‘சீட்’ கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி என அறிவித்து விடாபிடியாக இருந்தார்.
இதனால் அவரை கூட்டணிக்குள் இழுக்க அதிமுகவும் பாஜகவும் யோசித்தன.
அதற்குள் பாமகவை கூட்டணிக்குள் தன்வசப்படுத்தியது பாஜக. இதனால் வேறு வழியின்றி தேமுதிகவை கூட்டணிக்குள் இழுத்தது அதிமுக.
மத்திய சென்னை, விருதுநகர், தஞ்சாவூர், கடலூர், திருவள்ளூர் என 5 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், பிரேமலதா நிபந்தனை விதித்ததாகக் கூறப்படும் ராஜ்யசபா சீட் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘‘வெத்தலை பாக்கு மாத்தியாச்சு; தேதிதான் குறிக்கணும். ராஜ்யசபா சீட் உறுதி; வெகு விரைவில் அறிவிப்போம், பொறுமையாக இருங்கள்’‘ என பிரேமலதா பதிலளித்ததாக தினமலர் தகவல் வெளியிட்டுள்ளது.
‘‘வரும் மார்ச் 24ஆம் தேதி திருச்சியில் நடக்கும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளோம். 40 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து பிரசாரத்தை துவங்குகிறோம்,” என்றார்.

